அப்பா வயதுள்ள ஆணை காதலித்து மணந்த 21 வயதுப் பெண்! செமத்தனமான காரணம்!

அமெரிக்காவில் தனது தந்தை வயதுடைய நபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண். பார்ப்பவர்கள் தங்களை தந்தை மகள் எனக் கூறுவதால் அப்பெண் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்.


அமெரிக்கா மாகாணம் மேரி லாண்ட் பகுதியைச் சேர்ந்த டோரி பரோன் 21, இவர் ஒரு கரோக்கி விரும்பி இவர் தனது குழுவுடன் அடிக்கடி கரோக்கி பாருக்கு சென்று வந்துள்ளனர்.இந்நிலையில் அவரைப் போலவே எட்டி ஸ்மித் 48 , என்பவரும் ஒரு கரோக்கி விரும்பி அவரும் அடிக்கடி கரோக்கி பாருக்கு வந்துள்ளார். ஒரு நாள் இருவரும் சந்தித்து நிலையில் முதல் சந்திப்பிலேயே அவர்களது நட்பு காதலாக மாறியது பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இருவரும் அடிக்கடி வெளியில் செல்வது மற்றும் கரோக்கி பார்க்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். இந்நிலையில் டோரி இருக்கும் குழுவில் ஒரு நபர் டோரியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில்  எட்டியுடன் அப்பெண் நெருக்கமாக பழகுவதை பார்த்த அந்த நபர் எட்டியை பற்றி தவறுதலாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார். இந்நிலையில் இருவரது காதல் வலுவாக இருந்த நிலையில் அப்பெண் அந்த நபர் கூறுவதை ஏற்கவில்லை. 

இதையடுத்து சில நாட்கள் சென்ற நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் இதையடுத்து இவர்கள் வெளியில் செல்லும் போது இவர்கள் ஜோடியை பார்த்து பலர் தந்தை மகள் போல் உள்ளது என கிண்டல் செய்துள்ளனர். அவர்களுக்கு இல்லை நாங்கள் கணவன் மனைவி தான் என அப்பெண் பலமுறை தெரிவித்துள்ளார்.

இருந்தும் வெளி உலகிற்கு இவர்களது ஜோடி தந்தை மகள் போலவே தெரிகிறது. இவர்கள் வெளியில் செல்லும் போது இவர்களை சந்திக்கும் இசைக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இவர்களது ஜோடியை கிண்டல் செய்தாலும் தங்களுக்கு பழகிவிட்டது என அவர்கள் பெருமிதத்துடன் தங்களது இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வருகின்றனர்.