போஸ்டரில் உதயநிதி படம் போடலையா? நிர்வாகிகளை மிரட்டும் தி.மு.க. கிச்சன் கேபினட்

வரும் 2020 தேர்தலை முன்னிட்டு‘விடியலை நோக்கி.., ஸ்டாலினின் குரல்’ என்கிற பிரசார நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் தொடர்ந்து தி.மு.க. நடத்திவருகிறது. ஸ்டாலின் உள்ளிட்ட அத்தனை முக்கிய தலைவர்களூம் கலந்துகொள்கிறார்கள்.


ஏற்கனவே ஸ்டாலின் அறிவித்தது போன்று, இந்த கூட்டத்திற்கு செயப்படும் விளம்பரங்களில் பெரியார், அண்ணா, கருணாநிதி படங்களை சின்னதாகவும், ஸ்டாலின் படங்களை மட்டும் பெரிதாகப் போட்டு விளம்பரம் செய்கின்றனர்.

இதேபோன்று உதயநிதி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்பட்ட விளம்பரம்தான் கடும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது. அதாவது உதயநிதி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் போட்டோவை போடாமல் விட்டார்களாம். அதனால், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு கிச்சன் கேபிடனட்டில் இருந்து கடுமையான திட்டு விழுந்திருக்கிறது.

இதுமட்டுமில்லாம, விடியலின் குரல் நிகழ்ச்சிக்கான செலவுகள் அனைத்தும் கட்சி நிர்வாகிகள் தலையில்தான் விழுகிறது. செலவு செஞ்சும் கெட்ட பெயரும் திட்டும் வாங்கவேண்டியிருக்கிறதே என்பதுதான் தி.மு.க. நிர்வாகிகளின் நிலை.

பரிதாபம்தான்.