திருச்சியில் துணி காயப்போடும் பொழுது கணவன் மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துணிகாயப்போடும் போது அலறிய மனைவி! பதறி அடித்துக் கொண்டு சென்ற கணவன்! 2 பேருமே சடலமான பரிதாபம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜான்சி. இவரது கணவர் தர்மர். இவர் வழக்கம் போல் நேற்று மாலை அவரது வீட்டிற்குப் பின்புறம் இருக்கக்கூடிய கொடி கம்பியில் துணிகளை காயப் போட்டு உள்ளார்.
அப்போது திடீரென பலத்த காற்று வீசவே தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பி ஒன்று அவர் மீது பட்டு அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் அலறி துடித்தார்.
இதனை கண்ட அவரது கணவர் அவரை காப்பாற்ற முயலும் பொழுது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின் பிச்சம்பட்டி பகுதி காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஓர் ஆண்டிற்குள் கணவன் மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.