ரூ.100 கோடி கடன்..! திருப்பிச் செலுத்தாத கொடுமை..! ஏலத்திற்கு வந்த கே.என்.நேரு குடும்ப சொத்து..! திருச்சி பரபரப்பு!

திருச்சி: குடும்பச் சொத்துகள் ஏலம் போகும் நிலையில், அதுபற்றி கவலைப்படாமல் கே.என்.நேரு தனது கட்சிப் பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.


திருச்சி மாவட்ட திமுக.,வின் அசைக்க முடியாத சக்தியாக கே.என்.நேரு உள்ளார். கடந்த10 ஆண்டுகளாக திமுக ஆட்சிக்கு வர முடியாத சூழல் நிலவினாலும், நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு இடையே கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கே.என்.நேரு அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.  

இந்நிலையில், திருச்சி கண்டோன்மென்ட் இந்திய வங்கி கிளையில் கே.என்.நேரு வாங்கியிருந்த வங்கிக் கடனுக்காக, அவரது அசையா சொத்துகள் சில ஏலத்திற்கு வந்துள்ளன. இதன்படி, நேரு பெயரில் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமாக தாயனூர், நவலூர் குட்டப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் 80 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடங்கள் மீது ரூ.109 கோடி வங்கிக் கடன் வாங்கப்பட்டுள்ளது.

அந்த கடனை இதுவரை திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில் வங்கி நோட்டீஸ் அனுப்பியதற்கும் சரியான பதில் இல்லை. இதையடுத்து, அவரது குறிப்பிட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இந்த அசையா சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.115.93 கோடி எனவும், இதற்காக வரும் நவம்பர் 11ம் தேதி நடைபெற உள்ள ஏலத்தில் யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலமாக பங்கேற்கலாம் எனவும் கண்டோன்மென்ட் இந்தியன் வங்கிக் கிளை சார்பாக, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுபற்றி எந்த பதிலும் கூறாமல் நேரு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.