சென்னையில் மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் பணம், நகை, திருடிவந்த பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
புருசன் வேலைக்கு ஆகல..! அதான் நான் இந்த தொழில்ல இறங்கிட்டேன்..! 24 வயதில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் தேவி..!
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி தேவி வேலைக்கு செல்ல மனமில்லாமல் ரயில் பயணிகளிடம் திருடும் தொழிலை செய்து வந்துள்ளார். மின்சார ரயில்கள் மட்டுமே இவர் திருடுவார். சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினமும் காலையில் இருந்து மாலை வரை திருடுவது வழக்கம்.
பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் மட்டுமே பயணிக்கும் இவர் கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்டு பெண்களிடம் உரசி நின்றபடியே அவர்களது கைப்பையில் இருந்து என்னென்ன எடுக்க முடியுமோ எடுத்து விட்டு அடுத்த நிலையத்தில் இறங்கி விடுவார். இது குறித்து பலமுறை பெண் பயணிகள் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
நேற்று கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலில் வழக்கபோல் பயணம் செய்த தேவியை பார்த்து போலீசாருக்கு சந்தேகம் வர அவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேச அவர்தான் பயணிகளிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. 24 வயதே ஆன தேவியை கைது செய்த போலீசார் ரயிலில் பிக்பாக்கெட் அடிப்பதில் கைதேர்ந்தவர் என தெரிவித்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 77 ஆயிரம் ரூபாய், 70 சவரன் நகை, பறிமுதல் செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இவர் திருடும் செல்போன், நகை உடனே விற்று பணமாக்கிவிடுவாராம். மேலும் திருடும் பணத்தில் விதவிதமாக நடிகைகபோல ஆடைகள் வாங்கிக் கொள்வாராம். இவரது கணவர் வீட்டை பார்த்துக் கொள்ள தினமும் வேலைக்கு செல்வது போல் வந்து மின்சார ரயில்களில் கைவரிசை காட்டியுள்ளார் தேவி.
a