ராட்சசன் விஷ்ணு விஷாலுடன் இணையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக, விஷ்ணு விஷால் உடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.


நடிகர் விஜயின் ஒன்றுவிட்ட சகோதரர் விக்ராந்த். இவரது சகோதரர் சஞ்சீவ் ஏற்கனவே தாக்க தாக்க என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்நிலையில், தனது 2வது படத்தை விக்ராந்த் நடிப்பில், விஜய் சேதுபதி வசனம் எழுத, இயக்குவதாக, சஞ்சீவ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

ஆனால், எதிர்பாராத சூழல் காரணமாக, அந்த படம் சமீபத்தில் கைவிடப்படுவதாக, தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது சஞ்சீவ் இயக்கத்தில் விக்ராந்த் புதிய படத்தில் நடிப்பதாக, மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், விஜய் சேதுபதி கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது வடசென்னை பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.இதுதவிர, நடிகர் விஷ்ணு விஷால் , விக்ராந்த் உடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், விஜய் சேதுபதி திரைக்கதை மட்டும் எழுதவில்லை. அவரும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக, படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், நண்பர்கள் என்ற முறையில், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், விக்ராந்த் சேர்ந்து நடிக்கும் இப்படத்திற்கு, இன்னமும் பெயரிடப்படவில்லை.