பச்சிளம் பெண் குழந்தையின் தலையை கடித்து தின்ற கொடூர நாய்கள்! நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!

பிறந்த குழந்தையை நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.


தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள ரெஜிந்தால் என்ற கிராமத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்த ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் சடலத்தை பார்த்தபோது தலை மற்றும் இடது கை இல்லாமல் இருந்தது.

தெரு நாய்கள் அந்த சடலத்தை இழுத்து வந்ததை ஊர் மக்கள் பார்த்துள்ளனர். அதை ஆய்வு செய்தபோது தெருநாய்கள் குழந்தையின் தலை மற்றும் இடது கையை கடித்துக் தின்று இருப்பது தெரியவந்தது. பிறந்து இரண்டு மூன்று தினங்களே ஆன அந்தப் பெண் குழந்தை தெரு நாய்களிடம் சிக்கியது எப்படி என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் குழந்தை என்பதால் கொலை செய்யப்பட்டதா? அல்லது மந்திர தந்திர காரியங்களால் குழந்தை இந்த நிலைக்கு ஆளானதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. தீர விசாரித்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த வீட்டிலாவது பதிவு செய்யப்படாத பிரசவம் நடைபெற்றதா என்று கிராமந்தோறும் சென்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.