காங்., தோற்றதற்கு ராகுலின் அந்த 2 பழக்கம் தான் காரணம் என்னென்ன தெரியுமா?

ராகுல் காந்தி இந்த முறை பிரதமராக அமர்வதற்கு ஆசைப்படவில்லை என்பதை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்தே அறிய முடியும். அதனால்தான் பிரதமர் வேட்பாளர் என்றும் காங்கிரஸை அறிவிக்கவில்லை. ஆனால், எதிர்க் கட்சியாக நிற்க முடியும் என்று ராகுல் உறுதியாக நம்பியிருந்தார்.


அதுவும் நடக்கவில்லை என்பது காங்கிரஸ் கட்சிக்கும் ராகுலுக்கும் மிகப்பெரிய அப்செட். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும்  வெறும் 44 தொகுதிகளிலேயே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இதன் விளைவாக, மக்களவையில் அதிகாரப் பூர்வமான எதிர்க்கட்சி அந்தஸ்தை அக்கட்சியினால் பெற இயலவில்லை. 

இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனியாக 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால், மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற, மொத்தமுள்ள 543 எம்.பி. தொகுதிகளில், குறைந்தபட்சம் 10 சதவீதம் இடங்களில் ஒரு கட்சி வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது 54 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டே இரண்டு எம்.பி.க்கள் இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருக்கிறது. ராகுலும் எதிர்க் கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.

இந்த நிலையில் ராகுல் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விதான் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் தொக்கி நிற்கிறது. ஏனென்றால், முக்கியமான வேலை இல்லாத நேரங்களில் எல்லாம் சட்டென்று வெளிநாட்டுக்குப் போய்விடுவார். அது அவரது சுபாவம்தான். 

இனிமேல் அந்தக் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். இப்போது முதலே கட்சியைக் கட்டமைக்கும் பணியில் இறங்கவேண்டும். குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தோல்விக்குக் காரணத்தைக் கண்டறிய வேண்டும். ராகுலால் நிச்சயம் முடியும் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள். ராகுல்தான் மனது வைக்க வேண்டும்.