ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா? பிக்பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரி சென்றதன் ரகசியம் இது தான்!

நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சம்பளம் பேசப்பட்டதால் தான் கஸ்தூரி தனது நோய்வாய்பட்ட மகளை கூட விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாக கிசுகிசுக்கப்படுகிறது.


பிக்பாஸ் சீசன் ஒன் முதலே வீட்டிற்குள் செல்பவர்கள் பட்டியலில் கஸ்தூரி பெயர் இருந்தது. இதே போல் 2வது சீசனிலும் கூட கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் தான் செல்லப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறி வந்தார். இதற்கு காரணமாக தனது மகளின் உடல் நிலை மற்றும் தனது வீட்டை தான் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.

ஆனால் இந்த நிலையில் பிக்பாஸ் 3 சீசனின் வைல்ட் கார்டு என்ட்ரியாக அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் கஸ்தூரி. இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது கிடைத்த தகவல் தான் இது.

அதாவது கடந்த இரண்டு சீசன்களிலும் கஸ்தூரி எதிர்பார்த்த சம்பளம் கொடுக்க பிக்பாஸ் நிர்வாகம் முன்வரவில்லையாம். ஆனால் தற்போது கஸ்தூரி கேட்ட சம்பளத்தை கொடுக்க பிக்பாஸ் நிர்வாகம் தயார் என்று கூறியதால் தாமதிக்காமல் உள்ளே சென்றுள்ளார் கஸ்தூரி.

அதன் படி ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை கஸ்தூரிக்கு கொடுக் பிக்பாஸ் முன்வந்ததாகவும் அதன் படி ஒரு மாதம் உள்ளே இருந்தால் ஒரு கோடி ரூபாயுடன் வெளியே வந்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் அவர் உள்ளே சென்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.