தி.மு.க.வுக்கு எதிராக ரஜினியை நிறுத்தும் பிளான்..? குருமூர்த்தி சந்திப்பு பின்னணி.

கொரோனா தொற்று காரணமாக யாரையும் சந்திக்காமல் இருந்துவந்த ரஜினி, சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு முதன்முறையாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கொரோனாவை பற்றிய அட்சம் இல்லாமல் கட்சி தொடங்குங்கள், அதற்கு உங்கள் உடல் நிலை ஒத்துழைக்காவிட்டால், வீட்டுக்குள் இருந்தபடி திமுக வுக்கு எதிரான அணிக்கு வெளிப்படையான ஆதரவு அளிக்கவேண்டும் என்று குருமூர்த்தி பேசியிருக்கிறார்.

10 ஆண்டுகளாக பதவியில் இல்லாத காரணத்தால் கடும் பணவெறியுடன் திகழும் கட்சியை தடுத்து நிறுத்த ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆகவே, ரஜினி தன்னுடைய நிலையை மறுபரிசீலனை செய்கிறாராம்.