ஒரு கையில் ஸ்டியரிங்! மறுகையில் குடை! மழை பெய்தால் பயணிகள் உயிரோடு விளையாடும் அரசு பஸ் டிரைவர்!

திருவண்ணாமலை, வேலூர் இடையே செல்லும் அரசு பேருந்துகளில் உள்ளே மழை நீர் வருவதால் ஓட்டுனர் குடைபிடித்தபடி பஸ்ஓட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், வேலூர்- திருவண்ணாமலை மார்க்கத்தில் இயக்கப்படும் அரசுபஸ்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், தொடர் மழையின் காரணமாக அரசு பஸ்சுக்குள் மழைநீர் கொட்டுவதனால் ஓட்டுனர் குடைபிடித்தபடி பஸ்ஓட்டும் நிலை அறங்கேறியுள்ளது. 

பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது பெய்துவரும் பருவமழையில் அரசு பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்த நிலையில், பொதுமக்கள் சில நேரங்களில் பஸ்சுக்குள்ளேயே குடைபிடித்தபடி பயணம் செய்யவேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

குடைக்குள் மழை நாம் கேட்டுதவுண்டு ஆனால் தற்போது அந்த கவிதை போல் அரசு பஸ்க்குள் மழை என்ற சொன்னால் பொருந்தும் அந்த அளவுக்கு, வேலூர், திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு பணிமலையில் உள்ள பஸ்கள் பெரும்பாலானவை மிகவும் பழைய பஸ்கள் என்பதால் மேற்கூரைகள் சேதமடைந்து மழைபெய்தால் மழைநீர் பஸ்சுக்குள் ஒழுகும் அவலநிலை உள்ளது. 

கடந்த செவ்வாய் கிழமை இரவு பலத்த மழையுடன் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மார்க்கம் சென்று கொண்டு இருந்த தமிழக அரசு பேருந்து. அந்த பேருந்தில் சில பயணிகளும் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள். பின்னர், திடீர் மழையின் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநனர் குடைபிடித்துக்கொண்டு பேருந்து ஓட்டும் அவலநிலை ஏற்பட்டது. இதனை கண்ட சகப்பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.  

பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்வது ஒரு ஓட்டுநருடைய கடமை ஆனால் இவர் ஒரு கையில் குடை பிடித்தப் படி பேருந்து இயக்கினால் எப்படி இது பாதுகாப்பான பயணமாக இருக்கும் என்று பலர் கேள்விகள் எழுப்பியுள்ளனர். பின்னர் அங்கு இருந்த பயணிகளில் ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு இட்டுள்ளார். தற்போது இந்த இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.