123 கல்லூரிகளில் முதல் மாணவி! தங்கப்பதக்கம் வென்று சாதனை! ஆனால் படிப்பை தொடர முடியாத அவலம்!

திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, மேற்படிப்பை தொடர முடியாமல் அவலம் ஏற்பட்டுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் அமைந்துள்ளது திருவள்ளுவர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 5 மாவட்டங்களில் 123 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தான் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியும் செயல்ப்பட்டு வருகின்றது.  

இந்த கல்லூரியில், படித்து பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தான் கமலி, மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். கமலியின் தந்தை கணபதி அரக்கோணம் அருகே அசநெல்லிகுப்பம் கிராமத்தில் கூலி தொழிலாளி .

கமலி பி.காம் துறையில் சி.எஸ். பிரிவில் பயின்று இன்று பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று ஆளுநர் பன்வாரிலால் கையால் தங்கப் பதக்கமும் பட்டய சான்றிதழையும் பெற்றுள்ளார். தனது தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளாள்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கமலி வள்ளூவர் சொன்னது போல் ”தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற அளவுக்கு உயர்ந்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கமலி, இன்று பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று கமலி மேல் படிப்பு சி.ஏ. படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள கமலிக்கு தமிழக அரசு செவி சாய்க்குமா!