காதலன் கேட்ட ஒரே ஒரு கேள்வி! பெண் போலீஸ் எடுத்த அதிர வைக்கும் முடிவு!

திருப்பூர் பகுதியில் நேற்று தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் போலீஸ் ஒருவர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் ஆயுதப்படை பிரிவில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் பர்வீன் பாபி 23 ,இவருக்கும் அதை காவல் நிலையத்தில் பணிபுரியும் யூசுப் செரீப் என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே காவல் நிலையத்தில் வேலை பார்ப்பதால் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிகிறது.

இவர்களது காதல் விவகாரம் சில மாதங்களுக்கு முன்னர் தான் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது இந்நிலையில் முதலில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இருவீட்டார் பின்னர் ரம்ஜான் பண்டிகை முடிந்து திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக்கொண்டனர். 

இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென நேற்று யூசுப் செரீப் பர்வீன் பாபியின் வீட்டிற்கு வந்துள்ளார். இவர்கள் இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் யூசுப் செரீப், பர்வீன் பாபியை அடிக்க சென்றுள்ளார் இதனை பர்வீன் பாபியின் தாயார் சமாதானம் பேசி இருவரையும் தடுத்துள்ளார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான பர்வீன் பாபி சிறிதுநேரம் தனியறையில் அழுதுள்ளார். தனது தாய் வெளியே சென்ற நிலையில் பர்வீன் பாபி விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவரது தாயார் பர்வீன் பாபியின் அருகில் சென்றபோது எந்த ஒரு அசைவும் இன்றி படுத்திருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் உடனே சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.அவர்கள் வந்ததும் பர்வீன் பாபி இறந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் இச்சம்பவம் குறித்து அவரது காதலன் யூசுப் செரீப்பை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.