அட இப்படியுமா திருடுவாங்க! நூதன திருடிகள் எப்படி மாட்டுனாங்கன்னு பாருங்க!!

ஆழ்வார்பேட்டையச் சேர்ந்த கோமதி மற்றும் சுகந்தி திருமுல்லைவாயலில் கடையில் இருந்த பொருட்களை நூதன முறையில் திருடினர்.


தர்மராஜ் என்பவருக்கு சொந்தமான அந்த கடையில் வாடிக்கையாளர்கள் போல் பாவனை செய்து கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் அசந்த நேரத்தில் பொருட்களை புடவைக்குள் பதுக்கி கொண்டு சென்றனர்.

அவர்களின் வித்தியாசமான உடையையும்,நடையையும் பார்த்து கடையில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் சந்தேகப்பட்டு அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

இச்சோதனையில் கடையில் இருக்கின்ற பொருட்களை இவர்கள் திருடியது தெரியவந்தது. பொருட்களை திருடுவதற்காகவே புடவையை ஆடம்பரமாகவும்,பிரத்தியேகமாகவும் வடிவமைத்தும்,புடவைக்குள் பை போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.

மேலும் புகாரின் பெயரில்  போலீசார் விசாரணை செய்தபோது தான் இவர்கள் ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, மறைத்து வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டனர்.