கமல்ஹாசனின் டார்ச் லைட்டை பிடுங்கிட்டாங்க… குக்கருக்கு ஜே.. ரஜினிக்குத்தான் ஆட்டோவா..?

தமிழக அரசியல் பெரும் பரபரப்பான சூழலை எட்டியிருக்கிறது. மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம் கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதுதான் ரஜினியின் கட்சி என்ற பேச்சு பரபரப்பாகியுள்ளது.


தமிழகத்தில் அங்கிகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்கள் வழங்கியது. இதில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பிரசர் குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பட்டியலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் சின்னம் வழங்கப்படவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை. 

இதனால் கமல்ஹாசன் கடும் டென்ஷன் ஆகியுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்ளை சந்தித்த அவர், தான் நடித்த தசவதாரம் படத்தில் வரும் ‘’தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா’’ என் பாடல் வரிகளை கூறி இப்போது நமக்கு டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டுள்ளது. டார்ச்லைட் இல்லை என்றால் கலங்கரை விளக்கமாவோம் என தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண ஒரு ரூபத்தை விஸ்வரூபமாக்குவது இவர்கள் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்குது.