பூஜை! அன்னதானம்! ரத்த தானம்! இலவச ஹெல்மெட்! தேனியில் களைகட்டிய ரஜினி பர்த் டே!

தேனியில் ரஜினிகாந்த் அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்ட ரஜினி மன்ற முதன்மை காவலர்கள் சார்பில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


மேலும் தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் வடபுதுப்பட்டி அன்பு மனநல காப்பகத்தில் உணவு வழங்குதலும் ,போடியில் ரத்ததான முகாம் , மன்ற பெயர் பலகை திறப்பு விழா, மருத்துவமனைகளில் இலவச வேஷ்டி சேலை போர்வை மற்றும் உணவுப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் ரஜினிகாந்த் அவர்களின் மருமகன் தனுஷ் - ன்சொந்த குலதேவி கோவிழான ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்க புரத்தில் உள்ள கஸ்தூரி மங்கம்மாள் கோவிழில்சிறப்பு பூஜை அன்னதானம் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார் மேலும் தேனி நேரு சிலை அருகே உள்ள மூன்று ஏந்தால் பகுதியில் தலைக்கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

விதமாகமஇலவச தலை கவசம் வழங்கும் விழா நடைபெற்றது இந்த ஏற்பாடுகளை தேனி மாவட்ட ரஜினி மன்ற முதன்மை காவலர்கள் ஜெய் புஷ்பராஜ்,. பொன் சிவா, ரவிச்சந்திரன், மகேஸ்வரன் ,பாண்டி மணி வெங்கடேசன் ,ராஜ மகேஸ்வரன் ,முத்துப்பாண்டி சோமஸ் கார்த்திக் மற்றும் மன்ற நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.