ஒரு சமயம் பாண்டிய நாட்டில் பெருமழை பெய்தது. வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பாண்டிய மன்னன் முதுகில் விழுந்த பிரம்படி! ஈசன் பிட்டுக்கு மண் சுமந்த கதை தெரியுமா?
கரைகள் வலுவிழக்கும் அளவுக்கு வெள்ளம் சீறிப்பாய்ந்தது. எனவே மன்னன் ஆற்றின் கரையை செப்பனிடும் பணியை மேற்கொள்ள ஆயுத்தமானார்.
இப்பணியை தன் குடிமக்கள் அனைவருக்கும் எந்த பாராபட்சமும் இன்றி பகிர்ந்தளித்தார். எனவே மக்கள் அனைவரும் தங்கள் கடமையை செய்யலானர்.
அப்படியிருக்க அங்கே "வந்தி" என்று பெயருடைய பிட்டு விற்கும் ஒரு மூதாட்டி தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில மண்ணை சுமந்து போட்டுக்கொண்டிருந்தார் முதுமையின் தள்ளாமையால் அவரால் மண்ணை சுமக்க முடியவில்லை.எனவே கடவுளிடம் வந்தி தன் நிலை குறித்து முறையிட்டார்.
வந்தியின் நிலையை கண்ட ஈசன் ஒரு கூலியாள் வடிவில் அங்கே தோன்றினார். கிழவியின் அருகே சென்று தாயே உங்களுக்கு பதில் நான் இந்த மண்ணை சுமக்கிறேன். அதற்கு பதிலாக நீ எனக்கு என்ன கூலி கொடுப்பாய்? என்று கேட்டார்.
அந்த பிட்டு விற்கும் கிழவியோ, என்னிடம் கூலியாக கொடுக்க என்ன இருக்கிறது? வேண்டுமென்றால் உன் பசி போக்க இந்த பிட்டினை தருகிறேன். என்று கூறினார். அதற்கு இசைந்த அவன் அந்த கிழவியிடம் பிட்டை வாங்கி உண்டு தன் பசியாரியவுடன் மண்ணை சுமக்க ஆற்றை நோக்கி சென்றார்.
உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப பிட்டை உண்ட சொக்கருக்கும் அந்த மயக்கம் ஏற்பட்டது. அதனால் மன்ன சுமப்பதை மறந்து விட்டு ஆற்றங்கரையில் படுத்து உறங்கலானார்.
திடீரென அங்கே மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் ஒரு வேலையால் தூங்கிக்கொண்டிருப்பத கண்டு அவனை எழுப்பி வேலை பார்க்க சொல்லுமாறு ஆட்களை பணித்தார். உடனே அவர்கள் அவனை எழுப்பி வேலை பார்க்குமாறு கூறினார். ஆனால் சாமானியன் வடிவில் இருந்த ஈசனோ தன்னால் முடியாது என்று கூறிவிட்டார்.
கோபம் கொண்ட மன்னன் அவனை பிரம்பால் அடிக்க செய்தார். ஆட்களும் உடனே அவனை பிரம்பால் அடித்தனர். ஆனால் அவன் முதுகில் விழுந்த அடியை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான். பின்னரே அங்கிருந்தது ஆசாமி அல்ல அந்த சொக்கனாதரே என்று உணரப்பெற்றான் .
இந்த திருவிளையாடல் அரங்கேறியது ஆவணி மாத ஆரம்பத்தில்.தன்னை தஞ்சம் என்று அடைந்தவரை தாமதிக்காமல் வந்தருளவும் , இவ்வுலக உயிர்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம் என்பதையும் விளக்கவே நடத்தப்பட்டது இத்திருவிளையாடல்.
இத்திருவிளையாடலை விளக்கவே மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு மண் சுமந்த விழா கொண்டாடப்படுகிறது.
மதுரையில் அன்றைய தினம் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து சுந்தரேசர் கோயிலுக்கு எழுந்தருளுவர். வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிட்டு பிரசாதமாக வழங்கப்படும்.
ஓம் நமச்சிவாய...