ஆசிரியனின் வடிவில் அரிப்பெடுத்த பிராணி! மாணவிகளை அந்த இடத்தில் தொடுவதே முழு நேர வேலை!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறைத் தலைவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தான்தோன்றிமலையில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பாலியல் புகாருக்கு ஆளானவர் இங்கு பொருளியல் துறை தலைவராக உள்ள பேராசிரியர் இளங்கோவன். வயது சற்றுக் குறைவுதான் - 52. இந்த நபர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இளங்கலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து கல்லூரி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால், இளங்கோவன் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஒன்றுதிரண்ட மாணவ - மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதோடு, காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கவும் திரண்டனர் 

மாணவிகளை தொட்டுப் பேசுவதுதான் அவரது முழுநேர வேலை என்று குற்றம்சாட்டும் மாணவர்கள், ஆசிரியர்தானே என எண்ணி மாணவிகள் முதலில் சாதாரணமாக இருந்ததை சாதகமாக எண்ணிக் கொண்டு இளங்கோவன் அத்துமீறத் தொடங்கியதாக குற்றம்சாட்டினர். இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். 

இதனிடையே அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவிகளின் புகாரின் பேரில் பேராசிரியர் இளங்கோவனை  விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.