நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தொடர்ந்து விமர்சித்து வரும் சீமான், கவுதமன் வரிசையில் தனியரசுவும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.
ரஜினி தமிழகத்தை ஆள நினைப்பது அகம்பாவம், அவர் ஆட்சியில் வாழ்வது தமிழர்களுக்கு அசிங்கம்! போட்டுப் புளந்து எடுத்த தனியரசு!
சமீபத்தில் அவர் ரஜினி அரசியல் வருகை குறித்து சில கருத்துக்கள் தெரிவித்தார். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆளமுடியாது. தமிழ்நாட்டில் மட்டுமே இது சாத்தியம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை ரஜினி ஆளநினைக்கூடாது எனவும் ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அந்த ஆட்சியின் கீழ் நாம் வாழ்வது அசிங்கம் என்றும், இது வரலாற்று பிழையாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார் தனியரசு.
ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன், பாஜகவினர் தான் முயற்சிக்கிறார்கள் என கூறும் தனியரசு, தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறமுடியாது என்று தெரிந்துதான் ரஜினிகாந்த் களமிறங்காமல் தெளிவாக உள்ளதாக கூறும் தனியரசு, பரட்டை, சப்பாணியாக சினிமாவில் ரசிகர்களை மகிழ்வித்தவர்கள் ஆளுங்கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் வந்தால் அதை எதிர்த்து போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், நீட், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு போராடாத ரசிகன், நடிகர்களின் படங்கள் வெளிவரவில்லை என்றால் போராடுகிறான் என்றும், அதற்குக் காரணம் தேவையான மனப்பக்குவம் வராததே காரணம் என தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.