தாமிரபரணி பானு என்ன ஆனார் தெரியுமா? பட வாய்ப்புகள் இல்லாததால் இறங்கிய புது தொழில்!

கடந்த 2007ம் ஆண்டு விஷால் நடிப்பில் ஹரி இயக்கிய தாமிரபரணி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை பானுவை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறக்க முடியாது.


தாமிரபரணி படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் கதையை தேர்வு செய்வதில் பானு கவனம் செலுத்தவில்லை. இதனால் மார்க்கெட் இழந்த பானு துண்டு துக்கடா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தனது தாய் மொழியான மலையாள படங்களில் நடித்தார்.

மலையாளத்திலும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இதனை அடுத்து ஒரு பாடலுக்கு ஆடும் அளவிற்கு இறங்கி வந்தார் பானு. அப்போதும் கூட திரையுலகம் பானுவின் திறமையை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பானு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துள்ள பானு, பியூட்டி பார்லரும் நடத்தி வருகிறார். மும்பையில் இவர் நடத்தி வரும் பியூட்டி பார்லருக்கு பல முன்னணி நடிகைகள் வாடிக்கையாளராம்.