தளபதி 63! கதைத் திருட்டு புகாரில் அட்லி! என்ன செய்யப் போகிறார் விஜய்?

நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் அட்லி உருவாக்கிவரும் தளபதி 63 திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று குறும்பட இயக்குனர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.


விஜய் அட்லீ கூட்டணியில் தெறி மெர்சல் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவதாக உருவாகும் திரைப்படம் தளபதி 63. இந்தப் படத்திற்கு நல்ல பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை இந்த படத்தை தளபதி 63 என்றே குறிப்பிட்டு விளம்பரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குறும்பட இயக்குனர் கேபி செல்வா என்பவர் தன்னுடைய கதையைத்தான் தளபதி 63 என்கிற பெயரில் விஜய்யை வைத்து அட்லீ இயக்கி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை கதைக்களமாக வைத்து கதையை உருவாக்கி அக்கதையை இரண்டு தயாரிப்பு நிறுவனங்களிடம் தான் கூறியதாகவும் அந்த நிறுவனங்களிடம் இருந்து அட்லி கதையை பெற்று தற்போது விஜயை வைத்து இயக்கி வருவதாகவும் கே பி செல்வா தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கதையை திருடி அட்லி படம் இயக்குவதை அறிந்து தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாகவும் அவர்கள் எழுத்தாளர் சங்கத்தை அணுகுமாறு கூறியதாகவும் கேபி செல்வா தெரிவிக்கிறார். இதனையடுத்து எழுத்தாளர் சங்கத்தை அணுகியபோது சங்கத்தில் உறுப்பினராகி ஆறு மாதத்திற்கு பிறகே கதை திருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி தன்னை திருப்பி அனுப்பி விட்டதாக கே டி சில்வா கூறியுள்ளார். இதனால்தான் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளதாகவும் அந்த வழக்கின் விசாரணை வரும் 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் வர உள்ளதாகவும் கூறி திகழ்கிறார் கேபி செல்வா.

ஏற்கனவே விஜய்யின் கத்தி திரைப்படம் இதே போன்று கதை திருட்டு புகாரில் சிக்கிய. இந்த நிலையில் அட்லியை வைத்து ஒரு படத்தை விஜய் கொடுக்க நினைத்து அந்தப் படத்திலும் கதை திருட்டு புகார் எழுந்துள்ளதால் இந்த விவகாரத்தில் விஜய் என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.