ஸ்டீரியோ டைப் பேமிலி என்டர்டெயினர்! விஸ்வாசம் விமர்சனம்!

பொண்டாட்டி, பிள்ளை சென்டிமென்ட்ல வந்திருக்குற தமிழ் சினிமாவோட இன்னொரு படம்.


மதுரை பக்கத்துல அடாவடியா சுத்திக்கிட்டு இருக்குறவரு நம்ம அஜித். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். நல்லா டிரஸ் பண்ணிட்டு ஊர்ல ரவுசு விட்டுக்கிட்டு தன்னோட எடுபிடிகளை சந்தோசப்படுத்திக்கிட்டு அப்புடியே வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்குற கேரக்டர். வழக்கம் போல அந்த ஊரே அஜித்த தூக்கி வச்சி கொண்டாடும். அதுநால அந்த ஊருக்கு எதாவது பிரச்சனைனா அஜித் சும்மா இருக்கமாட்டாரு.

  இந்த நிலைய நயன்தாரா வர்றாங்க. அவங்க அஜித் கிராமத்துல மருத்துவ கேம்புக்கு வர்றாங்க. வீரம் படத்துல எப்டி தமன்னா மேல தலைக்கு காதல் வருமோ, அதே மாதிரி இந்த படத்துல நயன்தாரா மேலா தூக்குதுரைக்கு காதல் வந்துடுது. அப்டி இப்டினு ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்குறாங்க. அழகா ஒரு குழந்தை பிறக்குது. இங்க தான் படத்தோடு திரைக்கதைல ட்விஸ்ட். ஆமாங்க வழக்கம் போல ஊருக்கு ஒரு பிரச்சனை, அஜித் தலையிடுறாரு, பிரச்சனை இன்னும் பெருசாகுது. அஜித்தால தன்னோட பிள்ளைக்கு எதாவது ஆபத்து வரும்னு நயன்தாரா அஜித்துக்கு டாடா சொல்லிட்டு கிளம்பிடுறாங்க.

   இதனால் அஜித் சோகத்தோட தன்னோட பழைய வாழ்க்கையை நினைச்சிகிட்டு கிராமத்துலயே இருக்க, நயன்தாரா தன்னோட குழந்தையோட மும்பைல செட்டில் ஆகிடுறாங்க. கரெக்ட் தான் நீங்க யூகிச்ச மாதிரியே மும்பைல நயன்தாராவுக்கும், அவரோட குழந்தைக்கும் ஒரு பிரச்சனை வருது. வில்லன் ஜகபதி பாபு எப்படியாவது அவங்கள போட்டுத்தள்ள டிரை பண்றாரு. கரெக்ட் தான் இது தெரிஞ்சி அங்க தலை போய் தன்னோட பொன்டாட்டி, பிள்ளைய காப்பாத்துறார்ங்றது தான் மேட்டர்.

   என்னங்க நிறையவாட்டி கேட்ட கதை மாதிரி இருக்கா, சரி தான் ஏகப்பட்ட படம் இந்த கதையை வச்சி வந்திருச்சி, ஆனாலும் அஜித் இப்ப தான் இந்த கதைல நடிக்கிறாருனு அவரோட ரசிகர்கள் முதல்ல சமாதானம் ஆகிக்கலாம். கதை பழசா இருந்தாலும் அஜித்தோட ஸ்க்ரீன் பிரசன்ஸ், யோகி பாபு, தம்பி ராமையா எல்லாம் ஒரு வழியா படத்த போர் அடிக்காம கொண்டு போறாங்க. சண்டை காட்சிகள் எல்லாம் பின்னி பெடல் எடுத்துருக்காங்க. நயன்தாரா இந்த படத்துலயும் வழக்கம் போல் அவ்ளோ அழகு. இமான் பின்னணி இசை தியேட்டரை தெறிக்கவிடுது. ஆனா கதை திரைக்கதை பழசா இருக்குறதால சில அஜித் ரசிகர்களே அவ்வப்போது குரட்டை விட ஆரம்பிச்சாங்க.

   அதுவும் நயன்தாராவோட அஜித் செய்யுற காதல் காட்சிகளை எல்லாம் கண்கொண்டு பார்க்க முடியல. அவ்ளோ கொடூரமாக இருந்திச்சி. அப்புறம் சென்டிமென்ட் காட்சில அஜித் நடிப்ப பார்க்கும் போது ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலைங்ற மாதிரி இருந்தது உண்மை தான். காதல் அப்புறம் சென்டிமென்ட் காட்சிலயே படம் ஒரு மணி நேரம் ஓடிடுது. அதுனால தான் அஜித் ரசிகர்களே படம் சரியில்லங்றாங்க. ஆனால் ஒரு இரண்டு மணி நேரம் எதாவது பொழுது போக்கனும்னா விஸ்வாசம் பாக்கலாம், வீரம் படம் மாதிரி இருக்கு விவேகம் மாதிரி இல்ல அவ்ளோ தான்.

   இயக்குனர் சிவாவை ஒன்னும் சொல்ல முடியாது. ஏன்னா அவர் ஏற்கனவே அஜித் ரசிகர்களுக்கு மூனு படம் எடுத்தாரு. அதுல ரெண்டு தேறிச்சி. ஒன்னு தேரல, அதுநால இப்ப அஜித் ரசிகர்கள் வேண்டாம் பேமிலி ஆடியன்ஸ்க்கு படத்த எடுக்கலாம்னு விஸ்வாசத்தை எடுத்து வச்சிருக்காரு. அஜித்த வச்சி வேறு என்ன எடுக்குறதுன்னு அவர் குழம்பி இருக்குறது அங்கங்க தெரியுது. இத்தோட அஜித்தோட சவகாசத்தை சிவா முடிச்சிக்கலானா வேற வேலை எதாவது பார்க்க வேண்டியது தான்.