தாய்லாந்துக்கு செல்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! இனி, அது ஃப்ரீயாம்!

தாய்லாந்து நாட்டிற்குச் செல்வோருக்கு ஒரு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம். அக்டோபர் 31ம் தேதி வரை விசா கட்டணம் இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், அக்டோபர் 31ம் தேதி வரை, விஓஏ எனப்படும் விசா ஆன் அரைவல் கட்டணத்தை, தள்ளுபடி செய்வதாக, தாய்லாந்து அரசு கூறியுள்ளது. 2019 ஜனவரி 13ம் தேதி வரை இந்த கட்டண தள்ளுபடிச் சலுகை முன்பு விதிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்வோருக்கு, ரூ4,400 செலவு மிச்சமாகும். இந்த சலுகை அறிவிப்பின் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 83 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தாய்லாந்து அரசு குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்துக்குப் போய் என்ன செய்யப் போகிறேன், இது எனக்குத் தேவையில்லாத செய்தி என்கிறீர்களா, இதற்கு முன், பாங்காக் போய் வந்தவர்களை கேட்டுப் பாருங்கள். அலட்சியமாகப் பேசாமல், இப்பவே முழிச்சிக்கோங்க, இந்த ஆஃபரை பயன்படுத்தி, வாழ்க்கையை ஒருமுறை அனுபவிச்சி பாத்துக்கோங்க...