கற்பழிக்கனும் - கொலை செய்யனும் - இணையதளத்தில் வைரல் ஆகும் விபரீதம் கேம்

சென்னை: உங்களுக்கு ரேப் டே என்ற வீடியோ கேம் பற்றி எதுவும் தெரியுமா, தெரியாது எனில் இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள்.


தொழில்நுட்ப வளர்ச்சியால், இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதில், வீடியோ கேம்களுக்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அடிமையாகி விடுகின்றனர். இந்த வீடியோ கேம்கள் பலவும் இளைய தலைமுறையினர் மனதில் ஆபாச கருத்துகளை பதிப்பதாக உள்ளதால், உளவியல் நிபுணர்கள், இதுபற்றி நாள்தோறும் புதுப்புது எச்சரிக்கை விடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், டெஸ்க் பிளான்ட் என்ற நிறுவனம், ரேப் டே என்ற பெயரில், புதிய வீடியோ கேமை தயாரித்துள்ளது. அதில், ஒரு கொலையாளி, தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி, கவர்ந்து, அவர்களை ரேப் செய்துவிட்டு, எப்படியாவது முயற்சி செய்து கொலை செய்வது போல, வருகிறது. இதில் பங்கேற்பவர்கள், அதேபோல நடந்துகொள்ள வேண்டும். இந்த வீடியோகேம் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஆனால், அதற்கு முன்பாக, இந்த கேம் பற்றி, சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு பல தரப்பிலும் கண்டன குரல் எழுந்துள்ளதோடு, இதனை தடை செய்யும்படி, பலர் நீதிமன்ற உதவியையும் நாட தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ப்ளூ வேல் உள்ளிட்ட வீடியோ கேம்களால் சிறுவர், சிறுமியர் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.