பேத்தி செய்த சேட்டை! காரோடு கால்வாயில் பாய்ந்த தாத்தா! நேரில் பார்த்த டெம்போ டிரைவரால் நிகழ்ந்த அதிசயம்! ஆரல்வாய்மொழி பரபரப்பு!

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே எதிர்பாராதவிதமாக குளத்திற்குள் பாய்ந்த காரில் இருந்த தாத்தா பேத்தியை காப்பாற்றிய டெம்போ டிரைவரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அங்கிருந்த குளத்துக்குள் பாய்ந்தது இந்நிலையில் அதிலிருந்த தாத்தா மற்றும் பேத்தியை வேன் ஓட்டுனர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தனது 2 வயது பேத்தி பிரதீப் ஷா உடன் ஆரல்வாய்மொழி நோக்கி காரில் வந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தை காரின் முன் இருக்கையில் அமர்ந்து தனது தாத்தாவுடன் விளையாடிக்கொண்டு வந்துள்ளது. குழந்தை விளையாட்டு ஆர்வத்தில் அங்கிருந்த பொம்மைகளை எடுத்து காரில் தூக்கிப் போட்டு விளையாடியுள்ளது. இந்நிலையில் செண்பகராமன்புதூர் அருகே கார் வந்தபோது குழந்தை தனது தாத்தாவின் மீது விழுந்துள்ளார். இதனால் காரை கட்டுப்படுத்த முடியாமல் நிலைதடுமாறி வேகமாக ஓட்ட தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தனது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் ஓடி அருகில் இருந்த குளத்திற்குள் பாய்ந்துள்ளது. இந்நிலையில் கார் தண்ணீருக்குள் பாய்ந்தவுடன் பாக்கியராஜ் தனது பேத்தியை காப்பாற்ற முதலில் முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த டெம்போ டிரைவர் இச்சம்பவத்தை பார்த்து அதிர்ந்து தனது டெம்போவை நிறுத்திவிட்டு வந்து அவர்களுக்கு உதவி செய்துள்ளார்.

முதலில் குழந்தையை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் காரின் கதவு மூலம் பாக்கியராஜ் என்பவரையும் கரைக்கு கொண்டு வந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த ஊர் மக்கள் அப்பகுதியில் கூட்டம் கூடியுள்ளனர். இந்நிலையில் மூழ்கிய காரை தேடும் பணியில் இளைஞர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இயந்திரம் மூலம் குளத்திற்குள் மூழ்கிய காரை வெளியே எடுக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். குளத்திற்குள் தனது செல்போன் மற்றும் பேத்தி அணிந்திருந்த 2 பவுன் நகை ஆகியவை தண்ணீரில் மூழ்கி விட்டதாக பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் பாக்யராஜ் தனது பேத்தியை மதிய உணவு சாப்பிடுவதற்காக காரில் அழைத்து வந்ததாகவும் எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டு விட்டது என காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கார் குளத்திற்குள் பாய்ந்ததை அறிந்த டெம்போ ஓட்டுனர் மணிகண்டன் அவர்கள் இருவரையும் காப்பாற்றி மேலே கொண்டு அவர்களது உயிரை காப்பாற்றியுள்ளார். இந்நிலையில் வேன் டிரைவரை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.