தவறாக பயன்படுத்திய சகோதரன்! விபச்சாரியாக்கிய தாய்! டீன் ஏஜ் பெண்ணின் கண்ணீர் கதை!

மும்பை: பெற்ற தாயால் விபசாரத்தில் தள்ளப்பட்ட டீன் ஏஜ் சிறுமியை சொந்த சகோதரனே பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையின் கிழக்குப் பகுதியில் உள்ள மாங்குர்ட் பகுதியில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் பெண் ஒருவருக்கு, டீன் ஏஜ் வயதில் ஒரு பெண் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில், குறிப்பிட்ட சிறுமியை, கடந்த 2018 ஏப்ரல் மாதம் வலுக்கட்டாயமாக, அவரை விட அதிக வயதான நபருக்கு அவரது தாய் திருமணம் செய்து வைத்தார். கணவனால் பலமுறை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்ட அந்த சிறுமி, வேறு வழியின்றி, தாய் வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டார். 

அதன்பிறகும் விடாத அவரது தாய், பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு புரோக்கர் உதவியுடன், 60 வயதான நபருக்கு, தனது மகளையே கூட்டிக் கொடுத்துள்ளார். இதை தட்டிக் கேட்க வேண்டிய சிறுமியின் சகோதரன், அவரை உடன்பிறந்த சகோதரி என்றும் பாராமல் பலாத்காரம் செய்திருக்கிறான். 

இப்படி மாறி மாறி துன்புறுத்தப்பட்டு வந்த அச்சிறுமி, இதுபற்றி போலீசில் தற்போது புகார் செய்துள்ளார். இதன்பேரில், அந்த சிறுமியின் தாய், சகோதரன் மற்றும் கணவன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ, ஆள்கடத்தல் தடுப்புச் சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.