6ம் வகுப்பு மாணவியிடம் அந்தரங்க சேட்டை..! நேரில் பார்த்த 10ம் வகுப்பு மாணவிகள்! கல்விக் கூடத்தை கலவிக் கூடமாக மாற்றிய வாத்தியார் சுரேஷ் பாபு..!

வேலூர்: காட்பாடியில் 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


காட்பாடியை அடுத்த கசம் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிபவர் சுரேஷ்பாபு. இவர் தே பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆசிரியர் சுரேஷ்பாபுவின் சில்மிஷத்தை, சக மாணவிகளே பல முறை நேரில் பார்த்து, அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவியின்  

பெற்றோரிடம் அந்த மாணவிகள் புகார் செய்ய, தங்களது மகளை பள்ளிக்கு அனுப்புவதை பெற்றோர் நிறுத்திவிட்டனர். பிறகு, அந்த மாணவி போனால் என்ன, அடுத்த மாணவிகளை பார்ப்போம் என்று குறிவைத்து சுரேஷ்பாபு, மற்ற மாணவிகளை சில்மிஷம் செய்ய தொடங்கியிருக்கிறார். அவரது அநாகரீக செயல் பற்றி சமூக ஊடகங்களில் கூட தகவல்கள் வேகமாக பரவின. விசயம் வெளியே தெரியவந்ததும்,  

ஏற்கனவே பாதிப்பிற்கு உள்ளான 6ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் தங்களது உறவினர்களுடன் ஒன்றுசேர்ந்து வந்து, பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்தும் முறையிட்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஆசிரியர் சுரேஷ்பாபு குற்றம் செய்தது உறுதியானது. இதையடுத்து, அவரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தது. இவ்விவகாரம் பற்றி  

மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் ஆகியோருக்கும் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதற்கிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியரிடம் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காட்பாடி பகுதியில்  

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.