வகுப்பறையை படுக்கையறையாக மாற்றிய ஆசிரியர்! பெண்ணுடன் சிக்கியவரை சின்னாபின்னமாக்கிய மக்கள்!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு பெண் அமைப்பாளருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்த ஊர் பொதுமக்கள்.


நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.அதில் ஆசிரியராக பணிபுரிபவர் சரவணன் அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிபவர் ஜெயந்தி இவருக்கும் சரவணனுக்கும் இடையே நெருக்கமான பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயந்தி மற்றும் சரவணன் இருவரும் பலமுறை பள்ளி வேளையில் தனிமையில் இருந்ததை பார்த்த மாணவர் ஒருவர் மதிய உணவு இடைவேளையில் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதைக் கேட்டு ஆத்திரமடைந்த அவர்களது பெற்றோர்கள் உடனே பொதுமக்களின் உதவியுடன் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி பள்ளிக்கு வந்து ஆசிரியர் சரவணனை தேடியுள்ளனர்.  

அப்போது மாணவர்கள் கழிவறையிலிருந்து ஜெயந்தி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி இருப்பதை பார்த்து அதிர்ந்த சரவணன் ஜெயந்தியை அங்குள்ள சுவரின் மீது ஏறி தப்பிச் செல்ல உதவி செய்துள்ளார். மேலும் வெளியே வந்த சரவணனை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியர் சரவணனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் சரவணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சரவணனிடம் விசாரணை நடத்திய போலீசார் ஜெயந்தி அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு 6 மாதங்களாக பணம் செலுத்தவில்லை என்றும் அதற்கு தான் உடந்தையாக இருப்பதாக நினைத்து தன்னை பொதுமக்கள் தாக்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணனை சிறையில் அடைத்துள்ளனர். பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியரே இவ்வாறு ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.