வீட்டில் உள்ள தங்கத்துக்கு வரி போடணுமாம்! சொல்றது யாரு தெரியுமா?

வங்கியில் இருக்கும் பணத்தை எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு, மக்களிடம் எப்படியெல்லாம் வரி போட்டு உருவலாம் என்பதுதான் பா.ஜ.க.வின் கவனமாக இருக்கிறது.


இந்த நிலையில், வீடுகளில் இருக்கும் தங்கத்துக்கு வரி போடும் வகையில் ஒரு திட்டத்தை பா.ஜ.க. கொண்டுவரப் போகிறது என்று பொதுமக்கள் வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறார்கள். அத்தனை பேரும் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் நேரத்தில் இதனை வரவேற்று ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்லார்.

வீட்டில் இருக்கும் சிறிய அளவிலான தங்கத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும் என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் முயற்சி வரவேற்கத்தக்கது என்று சென்னை தங்க வைர வியாபாரி சங்க பொதுச் செயலாளர் சாந்த குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சாந்தகுமார், குறைந்த வரி வசூல் செய்வதன் மூலம் மக்களிடம் இருக்கும் உபரி தங்கத்தை பெற முடியும். இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிறிய சிரமம் என்றாலும் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறியிருக்கிறார்.

அரசாங்கத்துக்கு ஜால்ரா போடுகிறேன் என்று பொதுமக்களின் வயிற்றில் அடிக்கிறாரே..