36 வயது ஆணுடன் திருமணமாகியே 7 மாதம் தான்..! ஆனால் 7 மாதம் கர்ப்பமாக இருந்த 21 வயது இளம் பெண்! தற்போது திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! தஞ்சை பரபரப்பு!

தஞ்சையில் காதல் திருமணம் புரிந்த கணவருடன் ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சை அடுத்துள்ள குருங்குளம் காலனியை சேர்ந்த சந்திரலேகா என்பவரும் ராஜா கண்ணு என்பவரும் காதலித்து வந்த நிலையில் 8 மாதங்களுக்கு முன்ன திருமணம் செய்து கொண்டனர். வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் ரகசிய திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சந்திரலேகா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

ராஜா கண்ணு என்பவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் தம்பதிக்கிடையே அடிக்க தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார் சந்திரலேகா. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனாலும் பரிதாபமாக உயிரிழந்தார் சந்திரலேகா. இதையடுத்து சந்திரலேகாவின் தாயார் வல்லம் காவல்ந நிலையத்தில் புகார் அளித்தார். சந்திரலேகாவின் மரணத்திற்கு அவரது கணவர் ராஜா கண்ணுவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாவும் அதை சந்திரலேகா கண்டித்ததாகவும், இதனால்தான் கணவன் மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையில் சந்திரலேகா விஷம் குடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சாவுக்கு காரணமான ராஜா கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.