அலறும் இந்தியா… ஒளிரும் தமிழகம். இந்தியாவிலேயே இரண்டாவது மாவட்டம். எடப்பாடி பழனிசாமியின் முயற்சிக்கு கை மேல் பலன்.

கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பல மாநிலங்களிலும் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் வேலையின்மை மிகவும் குறைந்து காணப்படுகிறது.


இந்திய அளவில் வேலையின்மையானது 8.3% என்ற கணக்கில் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 2.6% என குறைந்துள்ளது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த் கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளே காரணமாக கருதப்படுகிறது.

தமிழகத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70% பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சாகுபடிக்கு உட்பட்ட பகுதிகளில், விதைப்பு நடவடிக்கைகளில் வலுவான 29% அதிகரிப்பு கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவியது. 2019-20 முதல் 2020-21 வரை 2.7 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு அதிகரித்து 12 லட்சம் ஹெக்டேராக விவசாய பகுதி உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தமிழகத்தை விட முன்னணியில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் வேலையின்மை 1.9% என உள்ளது. அடுத்தபடியாக தமிழகம் 2.6% என உள்ளது. இப்போது தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்கள் படையெடுத்துவரத் தொடங்கிவிட்டனர். எனவே வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த வேலையின்மை இன்னமும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.