தமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1..! கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கிய எடப்பாடி பழனிசாமி!

இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரொனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வினை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.


கோவிட் வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. அதனால் தான், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாராட்டினை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தர அயராது களப்பணியாற்றும் அனைத்து மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தலைமையில் 14 முறை மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை, எனது தலைமையில் 10 அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக் கூட்டங்கள் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளன 

தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில், 12 முறை காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் அவர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, njitahd தளர்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

இதுவரை தமிழ்நாடு, கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மாண்புமிகு அம்மாவின் அரசு சுமார் 7,323 கோடி ரூபாய்க்கு செலவினங்கள் மேற்கொண்டுள்ளது. இதில் மருத்துவம் சார்ந்த செலவினம் 1,983 கோடி ரூபாய், நிவாரணம் சார்ந்த செலவினம் 5,340 கோடி ரூபாய்.   

அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தியும், வீடு வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்தும், சுகூ-ஞஊசு சோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றை சிறப்பாக மேற்கொண்டும் வருகிறோம். தற்போது மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 1,40,091 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 27,057 படுக்கைகளும் ஐஊரு வசதி கொண்ட 6,106 படுக்கைகளும், 6,492 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. 

நமது மாநிலத்தில் தான் மிக அதிகமாக 184 ஆய்வகங்கள், மத்திய அரசின் சார்பாக 66 ஆய்வகங்களும், தனியார் சார்பாக 118 ஆய்வகங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 71,81,125 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கோவிட்-19 ஆய்வக பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 85,000 மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. 

கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, 15,000 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப் (Tocilizumab) 400 எம்ஜி, ரெம்டெஸ்விர் (Remdesvir) 100 எம்ஜி, இனாக்சபெரின் (Enoxaparin) 40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

மருந்துகள், பரிசோதனை கருவிகள், சூ95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் மும்முடி முகக்கவசங்கள், ஆகியவற்றை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகின்றது. களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் (zinc) மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களிடம் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும்.  

தற்போது, மழை காலம் தொடங்க உள்ளது. பருவ காலம் ஆரம்பிக்கும் முன்னதாகவே நகர்ப்புர/ஊரக பகுதிகளில் குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களை திறம்பட செயலாற்ற மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நாம் முன்னரே திட்டமிட்டு நீர்நிலைகளை தூர் வாரியது, ஆழப்படுத்தியது, வாய்க்கால்களை சீரமைத்தது போன்ற பணிகளினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் FWit வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதேபோல, தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதோடு, மக்களுடைய கோரிக்கையை ஏற்று பொதுப் போக்குவரத்தையும் அனுமதிக்கப்பட்டு மக்கள் தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தின் மூலமாக பயணம் செய்வதற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதனால், பொதுமக்கள் தமிழகத்தில் எல்லா பகுதிகளுக்கும் சென்று வருவதற்கும் மாண்புமிகு அம்மாவின் அரசால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதனால், வேலைக்கு செல்பவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கும் எளிதாக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதோடு, பல்வேறு ரயில்கள் இயக்குவதற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. விமானப் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, ஏற்கனவே இருந்த தடைகளெல்லாம் படிப்படியாக குறைக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.