இறந்துபோன அதிகாரிக்கு முக்கியப் பொறுப்பு கொடுத்த தமிழக அரசு! என்னங்க சார் உங்க சட்டம்?

தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர்,கபினி,ஹோரங்கி,ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.


அதைத்தொடர்ந்து வேறு வழி இல்லாமல் கர்நாடக அரசு திறந்துவிட்ட நீரால் மேட்டூர் அனையும் நிரம்பத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 111.16 அடியாக நீர்மட்டம் உள்ள நிலையில் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக மேட்டூரிலிருந்து நீர் திறந்து விடப்படுகிறது. அதைத்தொடர்ந்து நீர் தடையின்றி செல்ல வசதியாக காவிரி ஆற்றில் தூர்வாரும் பணிகளை விரைவு படுத்த பொதுப்பணி துறை உத்தரவிட்டு உள்ளது.

பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொதியாளர் ராமமூத்த்தி இந்த வேலைகளுக்கு 20 உதவி பொறியாளர்களை நியமித்து ஆனையிட்டார். அது போலவே பொதுப்பணி துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமைப் பொறியாளர் ராஜமோகன் 15 உதவி செயற் பொறியாளர்களை தூர்வாரும் பணிகளுக்காக நியமித்து உத்தரவிட்டார்.

இவர்கள் மேல் காவிரி மற்றும் நடுக்காவிரியில் தலைமையில் பணியாற்றுவார்கள் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதில் உதவி செயற் பொறியாளர் துளசிராமன் என்பவருக்கு நடுக்காவிரி,நடுநிலை வட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் , முதன்மை தலைமை பொறியாளர் ராம மூர்த்தியால் நியமிக்கப்பட்டு இருக்கும் இந்த துளசிராமன் என்கிற உதவிச் செயற் பொறியாளர் இறந்துபோய் இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்று பொதுப்பணித் துறை வட்டாரம் சொல்லிச் சொல்லி சிரிக்கிறது. பணிமட்டும்தான் வழங்கினார்களா, அவர் இறந்து போனது தெரியாமல் அவர் கணக்கில் சம்பளமும் வழங்கப்படுகிறதா என்பது நமது சந்தேகம்.