தமிழக வறட்சியும்! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலும்! திடுக்கிட வைக்கும் தகவல்!

தமிழகத்தில் மழை பொய்த்து வறட்சி நிலவுவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆகம விதிகள் மீறப்பட்டது தான் காரணம் என்று திடுக் தகவல் வெளியாகியுள்ளது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உலகப் புகழ் பெற்றது. இந்த கோவிலை காண பல்வேறு நாடுகளில் இரந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோவிலில் சொற்கவாசல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அந்த வகையில் அந்த சொற்கவாசலை காண வேண்டும் என்று தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆண்டாள் கோவிலுக்கு வருவர்.மேலும் மிக முக்கிய பிரமுகர்கள்,அரசில் கட்சி தலைவர்கள்,அரசு அதிகாரிகளும் சொற்க வாசல் வழியாக கோவிலுக்கு செல்ல ஆர்வம் காட்டுவர்.

இதற்காக  ஆகம விதிகள் மீறப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல், வைகுண்ட ஏகாதேசி மற்றும் ராப்பத்து பகல்பத்து காலங்களில் மட்டுமே திறக்கப்படுவது காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஐதீகம்.

ஆனால் அதிகாரிகள் தங்கள் தேவைக்காகவும், அரசியல் கட்சி தலைவர்களை கவனிக்கவும் சொற்க வாசலை வேண்டும் போது திறப்பதும் மூடுவதுமாக இருக்கின்றனர் என்றும் அதனால் மழை பெய்யவில்லை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.