லண்டன்: ஐன்ஸ்டீனை விட அறிவாளி என்ற பெருமையை தமிழ்ச் சிறுமி ஒருவர் பெற்றுள்ளார்.
அறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை தோற்கடித்த தமிழ்ச்சிறுமி! யார் தெரியுமா?
பிரிட்டனில் வசித்து வரும் ஹரிப்பிரியா என்ற 11 வயது சிறுமிதான் அவர். இவரது தந்தை ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர் ஆவார். இவர் இந்திய மென்பொருள் நிறுவனம் ஒன்றின் பிரிட்டன் கிளையில் பணிபுரிகிறார்.
இதனால், குடும்பத்துடன் பிரிட்டனிலேயே அவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஹரிப்பிரியா பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு என பல்வேறு துறைகளிலும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இவரது அறிவுக்கூர்மையை சோதிக்கும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற பிரிட்டன் மென்சாவின், Cattell III B என்ற தேர்வில் பங்கேற்கும்படி ராதாகிருஷ்ணன் சேர்ப்பித்தார். இதில், 162 மதிப்பெண்களை பெற்று ஹரிப்பிரியா சாதித்துள்ளார்.
ஆம், இந்த தேர்வு மதிப்பெண்கள், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்றோர் பெற்றதை விட 2 மதிப்பெண் அதிகமாகும்.
ஐன்ஸ்டீனை விட அறிவாளி என்ற பெருமை கிடைத்த நிலையில், இதுபற்றி ஹரிப்பிரியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் M16 சார்பாக உளவாளியாக மாறி, சர்வதேச அளவில் பல குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் விரும்புவதாக, ஹரிப்பிரியா கூறியுள்ளார்.