நடிகர் பாலா சிங் காலமானார்! சென்னையில் உயிர் பிரிந்தது!

நடிகர் பாலாசிங் காலமானார்.


நடிகர் நாசரின் இயக்கத்தில் உருவான அவதாரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேடை நாடக கலைஞர் பாலா சிங். அதனை தொடர்ந்து இந்தியன், சிம்மராசி, ராசி, புதுப்பேட்டை, விருமாண்டி என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருந்தார். 

கடந்த ஆண்டில் வெளிவந்த தானாசேர்ந்த கூட்டம், சாமி2, என்ஜிகே, மகாமுனி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் சினிமா மட்டுமின்றி, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

67 வயதாகும் அவருக்கு சில தினங்களுக்கு முன் உடல் நல குறைவு குறைவு காரணமாக வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சை பலனின்றி அதிகாலை 2 மணியளவில் மறைந்த பாலாசிங்கின் உடல் 9 மணி முதல் விருகம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள பாரதி அபார்ட்மெண்ட்ஸில் அஞ்சலிக்கு வைக்கப்படும். நாளை காலை அவரது சொந்த ஊரான களியக்காவிளைக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்பட உள்ளது.