இதோ இது என் தாயின் சடலம்..! நான் தான் இவளை சுட்டுக் கொன்றேன்..! நேரலையில் குலை நடுங்க வைத்த இளைஞன்!

நியூயார்க்: பெற்ற தாயை கொன்றுவிட்டு அதனை லைவ் ஒளிபரப்பு செய்த கொடூர சைக்கோ மகனை போலீசார் கைது செய்தனர்.


அமெரிக்காவின் உடா மாகாணத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி அன்டோனியா (24 வயது), என்பவர்  சமூக ஊடகத்தில் லைவ் வீடியோ சிலவற்றை வெளியிட்டார். அதில், ரத்தக்கறையுடன் தோன்றிய அந்த இளைஞர், தனது தாய் தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் அவர் இறக்கவில்லை என்பதால் அவரது கதையை முடிக்கப் போவதாகவும் பேசினார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சமூக ஊடக பயனாளர்கள் இதுபற்றி சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு வீடியோவை வெளியிட்ட ஜெஃப்ரி, அவரது தாய் இறந்துகிடப்பதை லைவ் ஒளிபரப்பு செய்தார். பிறகு, நான் ஜெயிலுக்குப் போக விரும்பவில்லை, எனக் கூறி கதறி அழும் காட்சிகள் இடம்பெற்றன. இதற்குள்ளாக அவரது இருப்பிடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர்.

இதில், குடிபோதையில் இருந்த ஜெஃப்ரி, கருத்து வேறுபாடு காரணமாக பெற்ற தாயை சுட்டுக் கொன்றிருக்கிறார். பிறகு, என்ன செய்வதென தெரியாமல் மாறி மாறி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு நாடகமாடியிருக்கிறார். இறுதியாக, தானும் தற்கொலை செய்ய முயன்றதாக, தெரியவந்தது.