மூளைக்கு செல்லும் நரம்பு வெடித்தது! உயிருக்கு போராடும் சன் டிவி ஒளிப்பதிவாளர்!

நமது சன் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் P.செந்திலுக்கு நேற்று high blood pressure ஏற்பட்டு, மூளைக்கு செல்லும் நரம்புகள் வெடித்து, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது.


சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதித்து, உயரதிகாரிகளின் ஒத்துழைப்போடு, தீவிர சிகிச்சை செந்திலுக்கு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தலையில் மிக முக்கியமான ஆப்பரேஷன், நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.  

1 % மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு என மருத்துவர்கள் கூறிய நிலையில், 3 மணி நேரத்துக்கும் மேல் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. உடலில் உறைந்து போயிருந்த ரத்தம் ஓரளவு அகற்றப்பட்டுள்ளது. மூச்சு விடவே முடியாமல் இருந்த செந்திலுக்கு, தற்போது சுவாசம் ஓரளவு சீராகியுள்ளது.  

இருப்பினும் செந்தில் இன்னும் அபாய கட்டத்திலேயே இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 48 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது வரையில் டவர் 2 பிளாக்கின் 2-வது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவான ICU 225 அறையிலேயே செந்திலுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.  

மருத்துவர்களின் அபார ஆற்றலோடும் துணையோடும் முடிந்த வரை போராடி, செந்திலின் உயிரைக் காக்கும் முயற்சியில் நாம் வெற்றி பெறுவோம் என நம்புவோம்.