மோடியை ஏமாற்றிய சூரியன்! பிடிச்சு உள்ளே போடுங்க எஜமான்!

இந்தியாவே ஆர்வமாக எதிர்பார்த்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி பகல் 11:16 மணிக்கு நிறைவடைந்தது.


நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே இதனை காண முடிந்தது. சென்னையில் வானம் மேகமூட்டமாக இருந்ததால், பார்க்க முடியாமல் போனது. இந்த சூரிய கிரகணத்தைக் காண்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

ஆனால், நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை அவரால் காண முடியவில்லை. இதற்காக மேபெக் ரக காண்ணாடி ஒன்று 1.5 லட்சம் ருபாய் செலவில் வாங்கி, அதைப் போட்டுக்கொண்டு காத்திருந்தார். 

இதுவே நமது நித்தியானந்தா என்றால், சூரியனை நிற்கவும், உட்காரவும், படுக்கவும் உத்தரவு போட்டு விதவிதமாக ரசித்திருப்பார். ஆனால் மோடியால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் வெறுப்பில் ஒரு ட்வீட் மட்டும் போட்டார்.

அந்த ட்வீட்டில், ‘நாட்டு மக்களை போல் நானும் சூரிய கிரகணத்தை காண ஆர்வத்தோடு இருந்தேன். மேகமூட்டத்தால் என்னால் கிரகணத்தை காண முடியவில்லை. இருப்பினும், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தெரிந்த கிரகணத்தை நேரலையில் பார்த்தேன். இது பற்றி நிபுணர்களுடன் தொடர்பு கொண்டது எனது அறிவை மேம்படுத்தியது’ என்று பதிவிட்டு இருந்தார்.

அடேங்கப்பா..