சரத்பவார் அதிரடி முடிவு..! ஆடிப்போன சிவசேனா!

இப்படி ஒரு முடிவை சரத்பவார் எடுப்பார் என்று சிவசேனாவும் ஏன் பா.ஜ.க.வும் நினைக்கவே இல்லை.


 திடீரென மக்கள் எங்களை எதிர்க்கட்சியாக அமர வைத்திருக்கிறார்கள், ஆட்சி அமைக்க முயலப்போவதில்லை என்று சொல்ல, மகாராஷ்டிராவே ஆடிப்போயிருக்கிறது. நேரத்துக்குத் தகுந்த மாதிரி திட்டம் போட்டு ஆட்சியைக் கைப்பற்றுவது பா.ஜ.க. ஸ்டைல். அந்த வகையில் சிவசேனாவை அடக்கியொடுக்கி, ஆட்சியில் அமர்ந்துவிட தேவேந்திர பட் நவிஸ் முயற்சி செய்தார். ஆனால், சிவசேனா அடங்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ், சிவசேனா, சரத்பவார் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசப்பட்டது. இந்த சூழலில் நேற்று சோனியாகாந்தியை சந்தித்துப் பேசினார் சரத்பவார். அதையடுத்து இன்று காலையில் தங்கள் முடிவை அறிவித்தார்.

‘‘கடந்த 25 ஆண்டுகளாகவே பா.ஜ.க.வும் சிவசேனாவும் கூட்டணியாகவே உள்ளன. அதனால் அவர்கள்தான் இணைந்து ஆட்சி அமைக்கவேண்டும். இப்போது எங்களுடன் கூட்டணி வைத்தாலும், எந்த நேரத்திலும் பிரச்னை நடந்துகொண்டுதான் இருக்கும். அதனால் நாங்கள் எதிர்க்கட்சியாக அமர்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஒரே நாளில் ஹீரோவாக உயர்ந்துவிட்டார் சரத்பவார்.