பெட்ரோலை 40 ரூபாய்க்குத்தான் விற்க வேண்டும்… பா.ஜ.க.வுக்கு சூடு போட்ட சுப்பிரமணியன் சுவாமி.

எப்போதுமே ஏடாகூடமான கருத்துக்களை சொல்லி அலறவிடுபவர்களில் ஒருவர், சுப்பிரமணியன் சுவாமி. முழுக்க முழுக்க பா.ஜ.க.வாக மாறிய பிறகும், அவ்வப்போது அவர் மோடி அரசுக்கும் சூடு போடுவதற்குத் தயங்குவதில்லை.


இன்று பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து கடுமையாக ஒரு ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில், ‘பெட்ரோல் கம்பெனிகளுக்கு ஒரு லிட்டர் அடக்க விலை 30 ரூபாய் ஆகிறது. வரி, கமிஷன் எல்லாம் அதிக பட்சம் 10 ரூபாய் வைத்தால்கூட, ஒரு லிட்டர் 40 ரூபாய்க்கு தாராளமாக விற்கலாம்.

இரண்டு மடங்குக்கு மேலாக, 90 ரூபாய்க்கு மேல் விற்பது அநியாயம். அப்பாவி பொது மக்களை அரசாங்கமே இப்படி சுரண்டினால் அவர்கள் என்னதான் செய்வார்கள்? என்று நறுக்கென கேள்வி கேட்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இதுவாவது பா.ஜ.க.வுக்கு ரோஷத்தை உருவாக்குமா..?