கல்விச் சுற்றுலாவில் மாணவிகள் முன்னிலையில் செக்ஸ்! கிறிஸ்டியன் காலேஜ் பேராசிரியரின் லீலைகள்!

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகள் கல்விச் சுற்றுலாவின்போது பேராசிரியர் ஒருவர் தங்களிடம் அத்துமீறியதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.


விலங்கியல் துறை மாணவ - மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் கர்நாடக மாநிலத்துக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். அப்போது அவர்களுக்கு பொறுப்பாளராகச் சென்ற பேராசிரியர் ரவீண் தங்களிடம் அத்துமீறியதாகவும், தரக்குறைவாகப் பேசியதாகவும் மாணவிகள் புகார்  தெரிவித்துள்ளனர். 

தங்கும் விடுதியில் பேராசிரியர் ரவீன் தனது உள் அங்கியை தனது தொடை மீது போட்டதாகவும், அதனை தான் சங்கடமாக உணர்ந்த போதும் அதனை அவர் எடுக்கவில்லை என்றும் ஒரு மாணவி தெரிவித்துள்ளார். தங்களுடன் இருந்த சக மாணவி ஒருவருடன்  தவறான தொடர்பில் ஈடுபடுவதற்காக தங்கள் அறைக்கு ரவீண் வந்ததாக மற்றொரு மாணவி கூறியுள்ளார்.

ஒரு வேளை அந்த மாணவியின் ஒப்புதலுடனேயே அது நடந்திருந்தாலும் தங்கள் கண்முன் நடைபெற்ற தரக்குறைவான சம்பவங்களை தாங்கள் அவதியுடன் உணர்ந்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். மேலும் மாணவிகளிடம் ரவீன் ஆபாசப் பேச்சுக்களை முன்வைத்ததாகவும், ஏன் நீங்கள் சுற்றுலாவின் போது சிறிய ஆடைகளை அணிந்து வரக் கூடாது என்றும் சுடிதார் உள்ளிட்ட ஆடைகள் பொருத்தமாக இல்லை என்றும் கூறியதாகவும் மாணவிகள் கூறுகின்றனர்.

மேலும் உடன் வந்த ஊழியரான சாமுவேல் டென்னிசன் என்பவர் ரவீனை தட்டிக் கேட்காததோடு அவரை ஊக்குவித்ததாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா சென்ற 50 மாணவிகளில் 35 பேர் கையெழுத்திட்டு கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் கொடுத்தும் அவர்கள் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தங்களுடன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் சுற்றுலா வரக்கூடாது.

தங்கள் தேர்வுத் தாள்களை திருத்த்க் கூடாது ஆகிய எளிய நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் துறையின் முன்னாள் தலைவரான அருள் சாம்ராஜ் என்பவர் தனது  மாணவிகளைப் பயன்படுத்தி தனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும், இது  பதவி தொடர்பான அரசியல் என்றும் ரவீன் கூறியுள்ளார். ஆனால் இதனை மறுத்துள்ள அருள் சாம்ராஜ், இது தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.