பள்ளியை விட்டு அழுதுகொண்டே வெளியேறிய டீச்சரை "போகாதிங்க.. டீச்சர்" என கதறி அழுதபடி டீச்சரை தடுத்த குழந்தைகளை, டீச்சர் கட்டியணைத்தபடி வெளியேறிய சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.
பெண் குழந்தைகளிடம் தகாத முறையில் உறவு..! டீச்சரை பணியிடமாற்றம் செய்து உத்தரவு..! ஆனால் கதறி அழுத மாணவிகள்!
கேரளா மாவட்டம் இடுக்கி பகுதியில் உள்ள துவக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிபவர் அம்ரிதா. இவர் குழந்தைகளை துன்புறுத்துவதாகவும், தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் கல்வித் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், அவரை கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்யும்படி உத்தரவிட்டது. கையில் ஆர்டரை வாங்கியவுடன் கதறி அழுதபடி அம்ரிதா பள்ளியை விட்டு வெளியேறினார்.
இதனை கண்ட குழந்தைகள் '"போகாதீங்க டீச்சர்" என கதறி அழுதபடி தடுத்தனர். இருப்பினும் அரசு உத்தரவு என்பதால் குழந்தைகளை கட்டி அணைத்தபடி அழுதுகொண்டே அமிர்தா வெளியேறிய சம்பவம் பள்ளி குழந்தைகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
டீச்சர் பற்றி குழந்தைகளிடம் கேட்டபோது, அம்ரிதா டீச்சர் மிகவும் நல்லவர். அவர் எங்களிடம் எப்போதுமே செல்லமாக நடந்து கொள்வார் என கூறியிருக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர் பகவான் என்பவர் பள்ளியில் இருந்து வெளியேறியபோது, குழந்தைகள் தடுத்து நிறுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அனைவரையும் நெகிழ வைத்தது. தற்போது இந்த சம்பவம் அனைவரையும் உறைய வைத்துள்ளது.