நட்ட நடுரோட்டில் ரொமான்ஸ்! பைக்கில் காதல் ஜோடியின் சல்லாபம்! வைரல் போட்டோ!

டெல்லி: சினிமா படங்களில் வரும் சில ரிஸ்கான காட்சிகளை நிஜ வாழ்வில் செய்பவர்களைப் பார்த்தால் ஓங்கி அறையலாம் போல என்றுதான் தோன்றும்...


சினிமா பைத்தியங்கள் நாடு முழுவதும் உண்டு. அப்படித்தான், டெல்லியின் மேற்குப் பகுதியில் ஒரு இளம்ஜோடி பைத்தியக்காரத்தனமான செயலில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். 1998ம் ஆண்டு, ஆமிர் கான், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான படம் குலாம். இதில், ஜாடு ஹாய் தேரா ஹி ஜாடு என்ற பாடல் மிகப் பிரபலம். அந்த பாடலில், ஆமிர் கான் பைக் ஓட்ட, ராணி முகர்ஜி, பின் சீட்டில் இருந்து அப்படியே தாவி, முன் சீட்டிற்கு செல்வார்.

அங்கு, ஆமிர் கானின் முன்புறம், பெட்ரோல் டேங்கில் அமர்ந்து அவரை கட்டிப்பிடித்துக் கொள்வார். ஆமிர் கான், அப்படியே பைக்கை ஓட்டிச் செல்வார்.இப்படியான சினிமா காட்சி படு பிஸியான டிராஃபிக் இருக்கும் ஒரு ரோட்டில் நடந்தால் எப்படியிருக்கும். அப்படித்தான், ராஜூரி கார்டன் சாலையில், இந்த இளம்ஜோடி நடந்துகொண்டுள்ளது.

இளைஞர் பைக் ஓட்ட, பின்சீட்டில் இருந்து, முன்புறத்திற்கு பாய்ந்து வந்து, பெட்ரோல் டாங்கில் அமர்ந்து, அந்த இளைஞரை கட்டிப்பிடித்து, இளம்பெண் முத்தம் தர, டிராஃபிக்கில் நொந்துபோயிருந்த மற்ற பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை பின்னால் சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து, ட்விட்டரில் பகிர, இந்த வீடியோ தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.