காமராஜர் இருந்த இடத்தில் கழிசடை இருக்கிறது! ஸ்டாலின் லூஸ் டால்க்! டென்சனில் எடப்பாடியார்!

காமராஜர் இருந்த இடத்தில் கழிசடை இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் சீண்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இவ்விழாவில் பங்கேற்பது எனது  கடமை மட்டுமல்ல என் உரிமையும் கூட. 

நாளை எனக்கு திருமண நாள்.  கல்யாணம் ஆகி 49 ஆண்டுகள் ஆகிறது. என்னுடைய திருமண சமயத்தில் காமராஜருக்கு உடல் நலம் குன்றியிருந்தது. திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு கலைஞர் காமராஜரை பார்க்கச் சென்றார்.

திருமணவிழாவில் நீங்கள் பங்கேற்கவில்லை என்றாலும் நான் மணமக்களை அழைத்து வருவதாக காமராஜரிடம் கலைஞர் கூறினார்.   ஆனால் காமராஜர் சொன்னார் இல்லை நான் வருகிறேன் என்றார்.

அவர் திருமண மேடை வரை காரில் வருவதற்கு ஏற்பாடு செய்தோம். இதற்காக திருமண மண்டபத்தையே மாற்றினோம். அங்கு வந்து அவர் என்னை வாழ்த்தினார். காமராஜர் வாழ்த்திய ஸ்டாலின் தற்போது திமுக தலைவராக உள்ளேன்.

காமராஜர் கட்சி தலைவராக மட்டுமல்ல ஒரு இனத்தின் தலைவர். அவர் ஒரு கிங் மேக்கர். காமராஜர் கல்விக் கண் திறந்தவர்.  இக்கட்டான சூழலில் கலைஞருக்கு ஆலோசனைகள் வழங்கியவர் காமராஜர். 

இன்றைக்கு ஒரு அடிமையாட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி நடத்தக் கூடியவர்கள் டெல்லிக்கு சென்று வாய்மூடி அமைதியாக இருக்கிறார்கள். உரிமைகளை விட்டுக் கொடுக்கிறார்கள்.

காமராஜர் இருந்த இடத்தில் கழிசடைகள் உள்ளது வருத்தமாக உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமியை சாடி ஸ்டாலின் பேசினார். முதலமைச்சராக இருக்கும் ஒருவரை கழிசடை என ஸ்டாலின் விமர்சித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. மேலும் லூஸ் டால்க் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.