லாட்டரி மார்டினை சிக்க வைத்த மம்தா - சபரீசன் கூட்டணி!

சமீபத்தில் லாட்டரி மார்ட்டினை ஏர்போர்ட்டில் பிடித்து விசாரணைக்கு அழைத்துச்சென்று ரெய்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு பின்னணி காரணம் தெரியவந்துள்ளது.


  மார்ட்டினுக்குச் சொந்தமான சுமார் 72 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்தது.  கேரளா மற்றும் கோயம்புத்தூரில் 22 இடங்கள், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்கள், கொல்கத்தாவில் மார்ட்டினுக்குச் சொந்தமான பெங்கால் லாட்டரி நிறுவனங்கள், அராய் ஸ்டீல்ஸ் என 20 இடங்களிலும் சோதனை நடந்தது.  

தவிர மும்பை, கவுகாத்தி, பீகார், ராஞ்சி, மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களீலும் ரெய்டு நடந்தது.  சென்னையில் அவரது  நண்பரும் சினிமா விநியோகஸ்தருமான பயாஸின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடத்தப்பட்ட ரெய்டில் ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளது.  

இந்த ரெய்டுக்குக் காரணம் தி.மு.க. குடும்பத்தில் இப்போது பலம் பொருந்திய பவர் ஸ்டாராக வலம் வரும் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்குக் கொடுத்த தேர்தல் நன்கொடைதான் காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோன்று மம்தா பானர்ஜிக்கும் தேர்தல் செலவுக்கு மிகப்பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறாராம் மார்ட்டின். அதனாலே  இப்போது வருமான வரித்துறை ரெய்டு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தி.மு.க. மற்றும் மம்தாவுக்கு பணம் கொடுத்த ஆதாரம் ஏதேனும் சிக்கும் பட்சத்தில் தேர்தலுக்குப் பிந்தைய விளையாட்டுக்கு அதனை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று மத்திய அரசு கருதுகிறதாம். அதனால் மூன்று நாட்களாக நடந்த ரெய்டுகளில் என்னென்ன சிக்கியது என்பது இப்போது வெளியே வரப்போவதில்லை என்றாலும் சபரீசனுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.