ராமதாஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! ஸ்டாலின் பஞ்சா நிலத்துக்குப் பதில் சொல்லவும்!

அசுரன் படம் பார்த்த ஸ்டாலின், பஞ்சமி நிலம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்தது மட்டுமின்றி இயக்குனர் வெற்றி மாறனுக்கும் நடிகர் தனுஷுக்கும் போன் மூலம் பாராட்டுகளைத் தெரிவித்து இருந்தார்.


ஸ்டாலின் என்ன சொன்னாலும் உடனே அதற்கு எதிராக எதையாவது சொல்லவேண்டும் என்று விக்கிரவாண்டி தேர்தலுக்காக சபதம் எடுத்திருக்கும் டாக்டர் ராமதாஸ், ‘பஞ்சமி நில விவகாரம் குறித்துப் பேசும் ஸ்டாலின், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் முரசொலி அலுவலகத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேட்டிருந்தார்.

அதற்கு இன்று பதில் கூறியிருக்கிறார் ஸ்டாலின். அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டரில், ‘‘மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது ‘முரசொலி’ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!

நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

என்ன செய்யப்போகிறார் ராமதாஸ்..? நானோ என்னுடைய வாரிசுகளோ பதவி பெற மாட்டோம் என்று சபதம் எடுத்தவர்தானே, இதையும் கண்டுகொள்ளாமல் நகர்வார் என்கிறார்கள். அதானே மானத்தைப் பார்த்தா அரசியல் பண்ண முடியுமா?