விவசாயிகளுக்காக நீலக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்! – கடுமையாக தக்கும் கே.பி.ராமலிங்கம்.

விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போன்று காட்டிக்கொள்ளும் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று, இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் கே பி இராமலிங்கம் Ex MP அறிக்கை வெளியிட்டுள்ளார்.


திமுக, இரண்டு கம்யூனிஸ்டுகள், மற்றும் வைகோ, விவசாயிகள் கஷ்டம் தெரியாத வளமையான கல்வி தந்தைகள் இன்று விவசாயிகள் போராட்ட களத்தில். இன்றைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி, தமிழகம் எங்கும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது அவர்களுடைய போராட்ட உரிமை.

சரி, இந்த வேளாண்மை குறித்தான சட்டங்களை திருத்துவதற்கான விதையை விதைத்ததே காங்கிரஸ் தானே. தான் மிஸ்டர் கிளீன் என்று காட்டிக் கொள்ளும், மன்மோகன் சிங்-கள், ப.சிதம்பரங்கள் நடவடிக்கைகளின் நீட்சிதானே இந்த விவசாயச் சட்டங்கள். இதன் ஆதியையும், அந்தத்தையும் யாராவது பேசுகிறார்களா?,

இந்த பிரச்சினையில் குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டிய காங்கிரஸ் போராட்டங்களில் கலந்து கொள்வதுதான் நய்யாண்டியான விஷயம். காரணகர்த்தாவாக இருந்த காங்கிரஸை சுட்டிக் காட்டாமல் பாஜக, மோடி என்று பேசுவதிலிருந்தே தெரிகின்றது இது தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்கு மட்டுமே. 

நான் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, எங்களை போன்ற விவசாயிகளின் பிரதிநிதிகளாக இருப்பவர்களின் கருத்துக்களை கேட்டு எம்.ஜி.ஆர், அரசு அதிகாரிகள், அனைத்து விவசாய சங்க தலைவர்களின் உறுப்பினர்களை கொண்டு உயர்மட்ட குழுவை அமைத்தார். பின்பு, சிறு, குறு விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக இலவச மின்சாரத்தை எம்.ஜி.ஆர் வழங்கினார். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் விவசாயிகள் போராடினார்கள், அதை நான் மறுக்கவில்லை. 

1989ல் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது அனைவருக்கும் இலவச மின்சாரம் திட்டத்தை அறிவித்தார். இதுதான் வரலாறு. அதில் எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் பங்கு உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைக்கு விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடுகளை நடத்திவிட்டு இன்றைக்கு விவசாயிகளுக்காக போராடுகிறேன் என்று போலியான பசப்பான வார்த்தைகளை பேசும் ஸ்டாலினுக்கு என்ன நேர்மை இருக்கின்றது. ஸ்டாலின் ஒரு சவலை குழந்தைதான். புரிதலும் கிடையாது, அனுபவமும் கிடையாது, பிரச்சினைகளின் தன்மையும் தெரியாது. தமிழகம் மற்றும் அதன் பிரச்சினைகள் பற்றிய சரியான புரிதல் கொண்ட யாராவது அவரை சுற்றி இருக்கிறார்களா? அதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.