விவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.! நம்புவார்களா மக்கள்?

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு குறிப்பாக தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று முதல்வர் எடப்பாடி உறுதி அளித்திருக்கிறார்.


இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நேரத்தில், ‘விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?’ என்று நியாயமான கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் ஸ்டாலினுக்கு பெருத்த அவமானமாகிப் போனது.

அதனால் இன்று தி.மு.க. கூட்டணியினர், தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டத்தில் விவசாயி போன்று ஸ்டாலின் வேடம் போட்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. 

காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். நேரடியாக போராட்டத்துக்கு வராத ஸ்டாலின், வயல் வெளிகளில் நடந்துவந்து, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடிதான், ஆய்வுக்கு செல்லும் நேரத்தில் இதுபோன்று விவசாயிகளை சந்திப்பது வழக்கம். அதனை காப்பியடித்து வயல்வெளியில் நிற்பதும், விவசாயிகள் குறை கேட்பதும் சரிதானா என்று ஸ்டாலின் மீது கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி வேடம் போட்டாலும் மக்கள் நம்பவா போகிறார்கள்.