அண்ணாச்சி ராஜகோபாலுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பா? அதிர்ச்சியில் ஜீவஜோதி!

இனிமேல் ஆயுள் முழுக்க அண்ணாச்சி ராஜகோபால், சிறைக்குள்தான் இருக்கவேண்டும் என்றுதான் அத்தனை பேரும் நினைத்தார்கள்.


ஆனால், உடல் நிலை சரியில்லை என்று நீதிமன்றத்துக்குப் போனார், ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால், ஆயுள்தண்டனை கைதியான சரவணபவன் ராஜகோபால்  ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் அனுமதிப்பட்டார். உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே அண்ணாச்சியின் உடல்நிலை மிகவும் மோசம், சீரியஸ் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அதே நேரத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத காரணத்தினால் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என ராஜகோபாலின் மகன் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கு விவகாரத்தில் ஆளும் அரசும் எதிர்ப்பு தெரிவிக்காமல் போகவே, அண்ணாசி ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், சிகிச்சைக்கான செலவு ஆகியவற்றை ராஜகோபாலின் மகன்தான் கவனிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் அறிந்துசமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் அத்தனை வசதிகள் இருக்கும்போது, எதற்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த தகவல் அறிந்து ஜீவஜோதி மிகவும் வேதனை அடைந்திருக்கிறார். பணம் இருந்தாலே தனி மதிப்புதான்...